Posts

அன்பின் எழுத்தாளர் நா.முத்துக்குமார் அவர்களுக்கு

Image
அன்பின் எழுத்தாளர் நா. முத்துக்குமார் அவர்களுக்கு,  நீங்கள் உயிரோடு இருக்கும்போது உங்கள் படைப்புகளைப் படித்து விட்டு இப்படி ஒரு கடிதத்தை உங்களுக்கு எழுதியிருக்க வேண்டும். அதனாலென்ன மறைந்த கலைஞர் பாலுமகேந்திராவை பார்த்து நீங்கள், இங்கு தானே இருக்கிறீர்கள்? காலத்தை வென்று நிற்கப் போகும் உங்கள் படைப்புகளை மரணத்தால் என்ன செய்துவிட இயலும் என்று கூறியது போல தம்பி முத்துக்குமார், உங்கள் படைப்புகள் இருக்கும் வரை நீங்களும் எங்களோடு வாழ்ந்து கொண்டுதான் இருப்பீர்கள். வேடிக்கை பார்ப்பவன் புத்தகத்தை தொடராக ஆனந்த விகடனில் நான் படித்ததில்லை. புத்தகமாக முழுமூச்சுடன் படித்தேன்.            எளிய விஷயங்களும், எளிய வார்த்தைகளும், எளிய மனிதர்களும் நம் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள் மிகவும் வலிமை வாய்ந்தவை.           இந்த வாழ்க்கையில் நாம் வேடிக்கை பார்ப்பதற்கும் இந்த வாழ்க்கைக்குள் நம்மையே நாம் வேடிக்கை பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. உண்மையில் இலக்கியம் படிப்பவர்கள் அனைவராலும் இவ்வித்தியாசத்தை அறிந்துகொள்ள இயலுமா என்றுத் தெ...

அன்பின் எழுத்தாளர் மம்முட்டி அவர்களுக்கு

Image
அன்பின் எழுத்தாளர் மம்முட்டி அவர்களுக்கு, நலம். நலமறிய விழைகிறேன். மலையாளத் திரையுலகின் சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னனாக திகழும் நீங்கள் எத்தனையோ திரைப்படங்களில் என் மனம் கவர்ந்தவர். ஒரே கடல்  என்கின்ற திரைப்படத்தில் தொடங்கி பேரன்பு வரை உங்கள் நாயகத் தன்மையின் அழகியல் பலரையும் தொந்தரவு செய்யக்கூடியது. 'ஜாதி மல்லிப் பூச்சரமே' என்று பாடும் திரைப்பட நாயகன் மம்முட்டியின் மீது அவ்வளவு பிரேமம் எனக்கு. அதெல்லாம் ஒரு நாயகப் பிம்பம் அவ்வளவே.  திரைப்படங்களை கடந்த 'முஹமது குட்டி' என்னும் மனிதனின் அசலான அக தரிசனம்தான் இந்த 'மூன்றாம் பிறை' என்னும் நூல். தன் வாழ்வில் பயணப்பட்ட சம்பவங்களின் வெறும் தொகுப்பாக அல்லாமல் தன் பிழைகளை, அகந்தையை, புரிதலற்றத் தன்மையை வாழ்வியல் சாரங்களோடுச் சேர்த்து எளிதில் காணக் கிடைக்காத மூன்றாம் பிறையாக எங்களுக்கு அளித்திருக்கிறீர்கள்.  'காழ்ச்சப்பாடு' என்னும் மலையாள மூலத்தில் வந்த இப்புத்தகம் சகோதரி ஷைலஜா அவர்களால் அத்தனை இலகுவாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அக்காவிற்கு எனதன்பு. உண்மையில் நாயக பிம்பம் என்பது வெறும் திரையில் வரும் நட...

அன்பின் எழுத்தாளர் மயிலன் ஜி சின்னப்பன் அவர்களுக்கு

Image
அன்பின் எழுத்தாளர் மயிலன் ஜி சின்னப்பன் அவர்களுக்கு,  நலம். நலமறிய விழைகிறேன். இந்த உலகிலேயே மிக சிக்கலான விஷயம் என்னவென்று கேட்டால் எனக்கு ஏனோ 'மனித மனம்' என்றுதான் தோன்றுகிறது. மனித மனத்தின் குறுக்குவெட்டுப் பாதையை கூர்மையாக அறிந்தவர்கள் என்று யாரையும் கூறிவிடமுடியாது. எல்லாமும் பிழைகளும் கற்றலுக்குமான உத்திகள்தான்.  மனித மனதின் உணர்வுகளை, சூழ்ச்சிகளை, வீழ்ச்சிகளை, உன்மத்தங்களை, வக்கிரங்களை, உண்மைகளை, பொய்மைகளை, காரண காரியங்களை, சமயோசிதங்களை ஓர் உளவியல் மருத்துவரால் கூட சரியாக எழுதி விட முடியாது என்று எண்ணுகிறேன். மருத்துவத் துறையில் கால்பதித்திருக்கும் உங்களின் 'பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்' உடலியல் கூறாய்வைப் போன்ற மனக் கூறாய்வு. உடலை கூறு போட கற்றுக் கொள்வதற்கு மருத்துவத்துறை நமக்கு பயிற்சி அளிக்கலாம். மனக்கூறாய்விற்கு நாம் மனத்தை விரிவு செய்திருக்க வேண்டும். பழக்கியிருக்க வேண்டும். முதிர்ச்சி அடைய அல்லது பக்குவப்படுத்தியிருக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன்.  ஒரு நாவலில் இவ்வளவு சுவாரஸ்யத்தை அடுக்க விட இயலுமா? உளவியலை, மனதின் போக்கை அழுத்தமாக பதிவு செய்வதற்...

கவிதை

 ஒரு நாளை  எப்படி தொடங்குவது  என்பதை நான்  அறிந்ததே இல்லை.  எப்படியும் தொடங்கியிருக்கிறேன்  மௌனமாக, சிரிப்பாக,  அழுகையோடு, ஏதோ நினைவுகளோடு.  அழுகை வருவதில்லை  பல மரண வீடுகளிலும்.  மனம் சிரிப்பதில்லை  திரையில் வரும்  பல நகைச்சுவைகளில்.  குறிப்பிட்ட நேரத்தில்  முடிக்கத் தெரிவதில்லை  பலவற்றை.  பயமுறுத்துகின்றன  காலஅட்டவணைகளும்  தேர்வு அட்டவணைகளும்.  தூங்கும் நேர விழிக்கும் நேர  ஒழுங்கு என்பதிலோ,  இது இப்படித்தான் என்ற இயற்கையற்ற கட்டுகளிலோ  எந்த நம்பிக்கையுமில்லை.  யாருக்கான முடிவையும்  எனக்கான முடிவையுமே  நான் அவ்வப்போது எடுப்பதேயில்லை.   வெற்று நம்பிக்கைகளுக்காகவும் பாசிசத்திற்காகவும்  நான் குரல் கொடுப்பதில்லை.  பிரச்சனை நான் யாராக இருக்கிறேன்  என்பதிலில்லை.  நான் யாராக இருக்க வேண்டும்  என்று யாரோ நினைப்பதில்தான்.

கொரோனா கால கவிதை 2

காட்டு மழை பெய்கிறது. சத்தம் மட்டும் கேட்கிறது.  ஜன்னல், கதவுகளுக்கு  இரும்புத்திரை  இருவாரங்களுக்கு இடப்பட்டிருக்கிறது.  தணியா சூடு  உடலுக்கும் மனதுக்கும்.  காய்ச்சல் கண்டிருக்கிறது உடல். தனிமை கொண்டிருக்கிறது மனம். உலகை உலுக்கும் நோய்த்தொற்று பாரபட்சமின்றி என்னிடமும்  தோளுரசிக் கொள்கிறது.  இந்த நோய்மையில், தனிமையில் இறந்து போனவர்களுக்கான அஞ்சலியை ஆத்மார்த்தமாய் சொல்கிறேன் இன்னொருமுறை.  தேநீர் ஒன்று வாசலில்  அன்புக் கரங்களால்.  அருகிலிருப்பதையும் விலகியிருப்பதையும்  முடிவு செய்வது  மனம் மட்டுமே! 

கொரோனா கால கவிதை 1

இரவெல்லாம் விளக்கை ஒளிர விட்டு உறங்கிக் கொண்டிருக்கிறேன். தலைமாட்டில் ஒன்று கால்மாட்டில் ஒன்று என்று பிள்ளைக் குட்டிகளோடு உறங்கியிருந்துவிட்டு இந்த திடீர் தனிமை கொஞ்சம் திணறடிக்கத்தான் செய்கிறது. இருட்டு இன்னும் கூடுதலாய் மிரட்டுகிறது. விடிந்தவுடன் என் பால்கனி சிட்டுக்குருவிகளின் குரல் ஓயாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. காண முடியாத அத்தனை முகங்களும் விழித் திரையில் ஒளிபரப்பாகிறது. இந்த புலம்பல்களுக்கிடையில் என் அறையிலேயே உள்ள இரண்டு குரோட்டன் செடிகளுக்கு நீர் பாய்ச்ச மறந்துவிட்டேன். அவைகளும் தனியாகத்தான் இருக்கிறது. ஆனால் சிரித்துக்கொண்டே...

கவிதை

விலங்கினங்களிலேயே  ஒரு தினுசான,  உயரிய விலங்கு நாம்.  ஹோமோ செப்பியன்ஸ் என்ற அடைமொழி நமக்குண்டு.  உயர்ந்த அறிவாளி என்று  நம்மை நாமே பிதற்றித் திரிவோம்.  காடு மலைகள் கடந்து பெருநகரங்களில்  குடிபெயர்ந்திருக்கிறோம்.  மானுடம் வளர்த்த பெருமை  மொத்தமும் நம்மையே சேரும்.  குழுக்களாகப் பிரிந்தோம். இனங்களாகப் பிரிந்தோம்  ஒவ்வொன்றாக கண்டறிந்தோம். அறியாமையின் ஆடுகளத்தில் இறைவனை மையமாக்கினோம். கண்டங்களைக் கண்டறிந்தோம். நாடுகளை வரையறுத்தோம். சாதியை உருவாக்கினோம். மதங்களைக் கொணர்ந்தோம். பெரு வணிகர்களைப் பெருக்கினோம். நாகரிகம் அடைந்தோம். போர்கள் செய்தோம். புரட்சி செய்தோம். இனப்படுகொலைகள் செய்தோம். வன்புணர்வுகள் செய்தோம்.  கவிதைகள் செய்தோம்.  காவியங்கள் எழுதினோம். பெண்மையை மிதித்தோம். பெயரளவில் துதித்தோம். ஜனநாயகம் அமைத்தோம். நீதிமன்றங்கள் கட்டினோம். அரசியல் வளர்த்தோம்.  அரசியல் செய்தோம்.  சாதகமான இடத்தில்  இருந்துகொண்டு  எல்லாம் சரியென்றோம். பாதகமான படுஞ்செயலை  சட்டமென மாற்றி சரி செய்தோம்.  ஆண்ட பரம்பரை ஆளட்டு...