கொரோனா கால கவிதை 1

இரவெல்லாம் விளக்கை
ஒளிர விட்டு
உறங்கிக் கொண்டிருக்கிறேன். தலைமாட்டில் ஒன்று
கால்மாட்டில் ஒன்று என்று
பிள்ளைக் குட்டிகளோடு
உறங்கியிருந்துவிட்டு
இந்த திடீர் தனிமை
கொஞ்சம் திணறடிக்கத்தான் செய்கிறது.
இருட்டு இன்னும் கூடுதலாய் மிரட்டுகிறது.

விடிந்தவுடன்
என் பால்கனி
சிட்டுக்குருவிகளின் குரல்
ஓயாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
காண முடியாத
அத்தனை முகங்களும்
விழித் திரையில்
ஒளிபரப்பாகிறது.
இந்த புலம்பல்களுக்கிடையில்
என் அறையிலேயே உள்ள
இரண்டு குரோட்டன் செடிகளுக்கு
நீர் பாய்ச்ச மறந்துவிட்டேன். அவைகளும் தனியாகத்தான் இருக்கிறது.
ஆனால்
சிரித்துக்கொண்டே...

Comments

Popular posts from this blog

அன்பின் எழுத்தாளர் நா.முத்துக்குமார் அவர்களுக்கு

அன்பின் எழுத்தாளர் மம்முட்டி அவர்களுக்கு

அன்பின் எழுத்தாளர் மயிலன் ஜி சின்னப்பன் அவர்களுக்கு