கவிதை

இது ஒர் ஓட்டம் 

நதியாகவோ காற்றாவோ
ஊற்றாகவோ
ஒலி, ஒளியாகவோ
எதனுடைய வேகத்தை
ஒத்தோ.

பறப்பதோ நடப்பதோ
தவழ்வதோ விழுவதோ
எழுவதோ அவரவர் பாடு.

காடோ கழனியோ
வீடோ வானமோ
அவரவருக்கு
உரித்தான எல்லை

தேங்கிப் போகாதவரை
மனிதயியலின் அற்புதம்
இவ்வுடலும் மனமும்...

Comments

Popular posts from this blog

அன்பின் எழுத்தாளர் நா.முத்துக்குமார் அவர்களுக்கு

அன்பின் எழுத்தாளர் மம்முட்டி அவர்களுக்கு

அன்பின் எழுத்தாளர் மயிலன் ஜி சின்னப்பன் அவர்களுக்கு