அன்பின் எழுத்தாளர் மயிலன் ஜி சின்னப்பன் அவர்களுக்கு
அன்பின் எழுத்தாளர் மயிலன் ஜி சின்னப்பன் அவர்களுக்கு, நலம். நலமறிய விழைகிறேன். இந்த உலகிலேயே மிக சிக்கலான விஷயம் என்னவென்று கேட்டால் எனக்கு ஏனோ 'மனித மனம்' என்றுதான் தோன்றுகிறது. மனித மனத்தின் குறுக்குவெட்டுப் பாதையை கூர்மையாக அறிந்தவர்கள் என்று யாரையும் கூறிவிடமுடியாது. எல்லாமும் பிழைகளும் கற்றலுக்குமான உத்திகள்தான். மனித மனதின் உணர்வுகளை, சூழ்ச்சிகளை, வீழ்ச்சிகளை, உன்மத்தங்களை, வக்கிரங்களை, உண்மைகளை, பொய்மைகளை, காரண காரியங்களை, சமயோசிதங்களை ஓர் உளவியல் மருத்துவரால் கூட சரியாக எழுதி விட முடியாது என்று எண்ணுகிறேன். மருத்துவத் துறையில் கால்பதித்திருக்கும் உங்களின் 'பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்' உடலியல் கூறாய்வைப் போன்ற மனக் கூறாய்வு. உடலை கூறு போட கற்றுக் கொள்வதற்கு மருத்துவத்துறை நமக்கு பயிற்சி அளிக்கலாம். மனக்கூறாய்விற்கு நாம் மனத்தை விரிவு செய்திருக்க வேண்டும். பழக்கியிருக்க வேண்டும். முதிர்ச்சி அடைய அல்லது பக்குவப்படுத்தியிருக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன். ஒரு நாவலில் இவ்வளவு சுவாரஸ்யத்தை அடுக்க விட இயலுமா? உளவியலை, மனதின் போக்கை அழுத்தமாக பதிவு செய்வதற்...