Posts

Showing posts from April, 2020

அன்பின் எழுத்தாளர் திரு. அ. மார்க்ஸ் அவர்களுக்கு,

Image
அன்பின் எழுத்தாளர் திரு .  அ. மார்க்ஸ் அவர்களுக்கு , நலம் . நலமறிய விழைகிறேன் . உங்களின் பெரியாரியப் பார்வை என்னை உங்கள் எழுத்துக்க ளின்  பக்கம் திரும்பவைத்திருக்கிறது . பெரியாரின் கண்டுகொள்ளப்படாத சிந்தனைகளின் மீதான ஒரு கவன ஈர்ப்பு  என்னும் புத்தகத்தின் மூலம் பல்வேறு பெரியாரிய சித்தாந்தங்களின் தெளிவை என்னால் உணர முடிந்தது .                குலாபிமானம் , மதாபிமானம் , பாஷாபிமானம் , தேசாபிமானம் என்ற எதுவும் தேவையற்றது எனும் சித்தாந்தமும் , அதில் அடங்கியுள்ள நுண் பொருளும் வியக்கத்தக்கவை . அந்த புத்தகத்தை பற்றிய என் கருத்துக்களை காணொளியாக்கி விட்டமையால் , இன்று நான் படித்து முடித்த பெரியார் , தலித்துகள் . முஸ்லிம்கள் , தமிழ் தேசியர்கள் என்னும் புத்தகத்தை பற்றி சில விவரணைகளை எழுத முனைகிறேன் .                பெரியாரின் கருத்துக்களை ஏற்பவர்கள் எப்படி காலங்காலமாக இருந்திருக்கிறார்களோ அதைப் போலவே பெரியாரை எதிர்ப்பவர்களும்...