அன்பின் எழுத்தாளர் டாக்டர் ஷாலினி அவர்களுக்கு,
அன்பின் எழுத்தாளர் டாக்டர் ஷாலினி அவர்களுக்கு, நலம். நலமறிய விழைகிறேன். உங்களை தொலைக்காட்சியின் வழியாக பரவலாக அறியும் முன்பே, விகடன் பிரசுரத்தின் பெண்ணின் மறுபக்கம் புத்தகம் வழியாக அறிந்திருந்தேன், ஆண் - பெண், பாலியல் போராட்டம், ஆதிமுதல் அந்தம் வரை என மானுட பெண்ணின் பல்வேறு பரிமாணங்களையும் எழுதி யி ருக்கிறீர்கள். ஓர் உளவியலாளர் தன்னிடத்து வரும் நோயாளிகளை பாதுகாப்பது மட்டும் தன் வேலை யி ல்லை, தொடர்ந்து பல்வேறு உளவியல் சிக்கல்களை ப் பற்றியும், மனித குலத்தின் வரலாற்றை ப் பற்றியும், மனித பெண்ணின் நிலை பற்றியும் எண்ணிலடங்கா விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்து வது ம் தன் வேலை யெ ன்று செவ்வனே பணி செய்கிறீர்கள். ...