கடிதம் 1 - அன்பின் எழுத்தாளர் திரு. மாரி செல்வராஜ் அவர்களுக்கு,
அன்பின் எழுத்தாளர் திரு . மாரி செல்வராஜ் அவர்களுக்கு , நலம் . நலம் அறிய விழைகிறேன் . இது கடிதத்திற்கான சம்பிரதாயம் மட்டுமல்ல , ஒரு சகோதர பாவத்தோடு உங்கள் நலமறிய விழைகிறேன் . உங்கள் சிறுகதை தொகுப்பான ‘ தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் ’ படித்த கையோடு, எழுதிக்கொண்டிருக்கிறேன் . கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு முன்பு வெளியாகி உள்ள இப்புத்தகத்தில் , காட்சிகள் இன்னும் மாறாமல் அப்படியே இருப்பதுதான் வேதனை . பெரிய புனைவுகள் இல்லாமல் உங்கள் பால்யத்தின் சுவடுகளை , சீழ் பிடித்த ரணங்களை , நினைவுகளை கதைகளாக நிரப்பி இருக்கிறீர்கள் . ‘ கூவம் அழுக்காய் மலமாய் நாற்றத்தோடு ஓடினாலும் தாமிரபரணியைக் காட்டிலும் புனிதமானது என்...