வலசை அறிமுகம்
- வலசை
உடல் ஏதோ
ஒரு இடத்தில் உழன்று கொண்டிருக்கிறது. மனமோ
பிரபஞ்சத்தில் பெயர் தெரியாத இடங்களுக்கெல்லாம் பயணித்துக் கொண்டிருக்கிறது .
வலசை
பறவைகளும் விலங்குகளும் புவியின் மின்காந்தப் புலத்தை உணர்ந்து செயல்படுமாம். எந்த மின்காந்தப் புலத்தையும்
அறியாமல் வலசை மனிதர்கள் இன்னும் புலம்பெயர்ந்து கொண்டுதானே இருக்கிறோம். எங்கெங்கோ வாழ்கிறோம் இல்லை
வசிக்கிறோம்.
வலசையாய் மாறி
ஏதோ வனாந்தரத்தில் உடலால் வசித்துக் கொண்டும், மனதின் பரப்பெங்கும் அப்பி வைத்திருக்கும்
வலியை,
அழுகையை,
இன்பத்தை,
சுயத்தை, பயத்தை
இன்னும் என்னென்னவோ உணர்வுகளை எல்லாம் கொட்டித் தீர்க்க முடியாத அத்தனையோடும் கொண்டாட்டமாய்
வாழ்கின்றோம். எண்ணப்
பாதை உமிழும் நீர்க் குமிழ்களை சேகரித்து வார்த்தையாக்கும் முயற்சியே இவ்வலசை வலைத்தளம்.
இப்போதுதான் கொஞ்சம் வசப்பட்டு இருக்கின்ற
வாசிப்பை,
வாசிப்பு கொடுக்கும் ஏதோ ஒன்றை வார்த்தைகளால் உமிழத் துடிக்கும்
எத்தனிப்பை ஒருவேளை உங்களால் புரிந்துகொள்ள இயலும்.
வலசை இனமே,
வாருங்கள்.
வாழும்
வரை பயணிப்போம்.
பயணிக்கும் வரை வாழ்வோம்.
ஹேமா...
Comments
Post a Comment