கவிதை 2
கரைந்து கொண்டேயிருக்கிறது
மெழுகுவர்த்தி.
ஒரு முற்றத்தின்
இருட்டைப் போக்க
போதுமானதாக இருக்கிறது
அதன் ஒளி.
ஒளியின் வீரியத்தில்
ஒளிந்து கொள்கிறது
இருட்டு.
அவ்வப்போது
அல்லாடுகிறது ஒளி
காற்றினூடே.
வெளிச்சம்
மெல்ல மெல்ல
சுயமிழக்கத் தொடங்குகிறது.
எந்தப் புகார்களும் அச்சவுணர்வுமற்று.
எச்சலனமுமின்றி இருளோடு
கரைகிறது அவ்வொளி
இவ்வளவே எல்லாமுமென்று.
Comments
Post a Comment