கொரோனா கால கவிதை 2

காட்டு மழை பெய்கிறது.
சத்தம் மட்டும் கேட்கிறது. 
ஜன்னல், கதவுகளுக்கு 
இரும்புத்திரை 
இருவாரங்களுக்கு இடப்பட்டிருக்கிறது. 
தணியா சூடு 
உடலுக்கும் மனதுக்கும். 
காய்ச்சல் கண்டிருக்கிறது உடல். தனிமை கொண்டிருக்கிறது மனம். உலகை உலுக்கும் நோய்த்தொற்று பாரபட்சமின்றி என்னிடமும் 
தோளுரசிக் கொள்கிறது. 
இந்த நோய்மையில், தனிமையில் இறந்து போனவர்களுக்கான அஞ்சலியை ஆத்மார்த்தமாய் சொல்கிறேன் இன்னொருமுறை. 
தேநீர் ஒன்று வாசலில் 
அன்புக் கரங்களால். 
அருகிலிருப்பதையும் விலகியிருப்பதையும் 
முடிவு செய்வது 
மனம் மட்டுமே! 

Comments

Post a Comment

Popular posts from this blog

அன்பின் எழுத்தாளர் நா.முத்துக்குமார் அவர்களுக்கு

அன்பின் எழுத்தாளர் மம்முட்டி அவர்களுக்கு

அன்பின் எழுத்தாளர் மயிலன் ஜி சின்னப்பன் அவர்களுக்கு