கொச்சி


என்டே கொச்சி {கடற்காயல்}

                                கேரளத்து தலைநகரை விடவும் அழகானதும், மக்கள் அடர்த்தியுமானது கடற்காயல் என்று பொருள்படும் கொச்சி நகரம். இங்கே வசிப்பவள் என்ற முறையில் என்டே கொச்சி என்ற உரிமையோடு  இத்தலைப்பின்கீழ் நான் காணும், கண்டிராத, அறிந்த கொச்சியை பற்றிய தேடுதலோடு என் கண்களும், கால்களும் பயணிக்க தொடங்கியிருக்கிறது.


                              அரபிக்கடலின் ராணி என்றழைக்கப்படும் கொச்சியின் மகாராஜாக்களை, கடல் வாணிபங்களை, போர்ச்சுகல் மற்றும் டச்சு ஆதிக்கத்தின் மிச்சங்களை, இயற்கையின் பேரனுபவங்களை, இயற்கையின் அச்சமூட்டும் அத்துமீறல்களை, மண்ணின் வாசனையை, மக்களின் மனநிலையை, பெய்யும் பெருமழையை, இறைவழிபாட்டை, சமய கோவில்களை, மதங்கள் கடந்த இறையாண்மையை, நூறுசதம் கல்வியை, கல்வி தந்திராத புரிதலை, லால் சலாம் என்று பொங்கும் புரட்சியை இ​ப்படி கொச்சியின் இன்ன பிறவற்றை நோக்கிய என் எண்ணப்பயணம் தொடங்கியிருக்கிறது.

                          1996 ல் கேரள அரசால் கொச்சின் என்ற பெயரிலிருந்து, கொச்சி என்றாக்கப்பட்ட, இந்நகரின் ஆன்மாவை அறியத் துடிக்கும் முயற்சி தொடங்கியிருக்கிறது.

                        கொச்சியின் கடற்கரைகளும், துறைமுகமும், டச்சு திருவாங்கூர் அரண்மனைகளும் காற்றைக் கிழித்துக்கொண்டு என் காதுகளில் கிசுகிசுக்கும் கதைகளை புனைவுகளோடு சேர்த்து கதையாக்கும் திட்டம் என் எழுத்துக்களால் நடந்தேறி விடவேண்டும் என்பதே அவா. கொச்சியின் ஆன்மாவை நோக்கிய பயணம் தொடரும்

ஹேமா

Comments

Popular posts from this blog

அன்பின் எழுத்தாளர் நா.முத்துக்குமார் அவர்களுக்கு

அன்பின் எழுத்தாளர் மம்முட்டி அவர்களுக்கு

அன்பின் எழுத்தாளர் மயிலன் ஜி சின்னப்பன் அவர்களுக்கு